முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஒக்டோபர் – நவம்பரில் இலங்கையில் கனமழை; பேராசிரியர் எச்சரிக்கை!

வலுவடைந்து வரும் ‘எல் நினோ’ (El Niño) காலநிலை மாற்றம் மற்றும் இந்தியப் பெருங்கடல் இருமுனைவு நிலை (IOD) காரணமாக, நடப்பு ஆண்டின் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கையில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தின் கடலோரப் பெருங்கடலியல் பேராசிரியர் சரித பத்தியராச்சி தெரிவித்துள்ளார்.

வலுவடைந்து வரும் எல் நினோ நிலைமைகளுடன், இந்தியப் பெருங்கடல் இருமுனைவு நிலையின் பலவீனமான நேர்மறைப் போக்கும் இணைந்து, எதிர்வரும் மாதங்களில் இலங்கையின் வானிலை அமைப்பில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்மேற்கு பருவக்காற்று காலமான இக்காலப்பகுதியில், இலங்கையில் வழக்கமாகப் பதிவாகும் மழைவீழ்ச்சியின் அளவு இந்த முறை குறைய வாய்ப்புள்ளது. 

ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்கள் வழக்கத்தை விட அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதுடன், அது 100 மில்லிமீற்றரைக் கடக்கக்கூடும்.

அடுத்த வருட ஆரம்பம் ஜனவரி – ஏப்ரல் காலப்பகுதியில் நாட்டில் மீண்டும் சராசரியை விடக் குறைவான 

மழைவீழ்ச்சியே பதிவாக வாய்ப்புள்ளது வறண்ட காலநிலை நிலவலாம்.

ஆஸ்திரேலிய வானிலை ஆய்வுப் பணியகம்  ஜூன் 14ஆம் தேதி சேகரித்த தரவுகளின் அடிப்படையில்

 இந்த காலநிலை முன்னறிவிப்பு மறுபரிசீலனை செய்யப்பட்டுள்ளது.

பசுபிக் பெருங்கடலின் மேற்பரப்பு வெப்பநிலை தற்பொழுது சராசரியை விட 0.92°C ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாகக் கணிக்கப்பட்டதை விட எல் நினோ நிகழ்வு அதிக வலுவடையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதமளவில் மத்திய பசுபிக் பெருங்கடலின் வெப்பநிலை சராசரியை விட 3.3°C வரை உயரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் வெப்பநிலை தற்போதைக்கு நடுநிலையாக (Neutral range) இருந்தாலும், கடந்த இரு வாரங்களாக கணிசமாக உயர்வடைந்து வருகிறது. ஜூன் 14 அன்றைய தரவுகளின்படி, இந்தியப் பெருங்கடல் இருமுனைவுச் சுட்டெண் (IOD Index) மைனஸ் (-) 0.13°C ஆகப் பதிவாகியுள்ளது.

Source: https://samugammedia.com/heavy-rains-in-sri-lanka-from-october-to-november-professor-warns-1781792994

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.