முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காணி விடுவிப்பிற்காய் போராடும் மக்களோடு எப்போதும் துணைநிற்பேன் – ரவிகரன் எம்.பி!

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு மக்களின் பூர்வீக  காணிகள் விடுவிக்கப்படவே வேண்டும் என வலியுறுத்திய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமது பூர்வீகக் காணி விடுவிப்பிற்காய் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் கேப்பாப்பிலவு மக்களுக்காக எப்போதும் துணைநிற்பேன் எனவும் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, கேப்பாப்பிலவு மக்கள் தொடர் போராட்டத்தினை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் நான்காவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கேப்பாப்பிலவு மக்களைீநாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் 27.06.2026இன்று நேரில் சென்று சந்தித்துக் கலந்துரையாடினார். இவ்வாறு அந்த மக்களுடன் கலந்துரையாடி நிலமைகளைக் கேட்டறிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கேப்பாப்புலவு மக்கள் ஆரம்பகாலத்தில் பிலக்குடியிருப்புக் காணி விடுவிப்பிற்காக 30நாட்கள் தொடர்ச்சியாக போராட்டங்களை நடாத்தி அந்த மக்களுடைய பிலக்குடியிருப்புப்பகுதியிலிருந்த பூர்வீகக் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தது.

அதன்பின்பு கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக கேப்பாப்பிலவுப் பகுதியிலுள்ள தமது பூர்வீக வாழ்விடக்காணிகளை விடுவிக்க வலியுறுத்தி மக்களால் போராட்டம் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, அந்துமக்களுக்குரிய ஒருபகுதிக் காணிகள் விடுவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கேப்பாப்பிலவு பகுதியைச்சேர்ந்த 55குடும்பங்களுடைய 59.5ஏக்கர் பூர்வீக வாழ்விடக் காணிகளும், 04குடும்பங்களுடைய 100ஏக்கர் காணிகளுமாக மொத்தம் 54பேருக்குரிய 159.5ஏக்கர் காணிகளும் விடுவிக்கவேண்டியுள்ளன. இவ்வாறு விடுவிக்கப்படாமலுள்ள தமது பூர்வீகக் காணிகளைவிடுவிக்குமாறு வலியுறுத்தியே, தற்போது மக்கள் மீண்டும் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.

அந்த மக்கள் தங்களுடைய பூர்விகக் காணிகள் தங்களுக்கு வேண்டும் என்றுதான் அந்தமக்கள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள். வேறு இடங்களில் காணிகள் எனுஅந்தமக்கள் போராடவில்லை.

எனவே இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கேப்பாப்பிலவு மக்களின் இந்தப் பூர்வீக்காணிகள் விடுவிக்கப்படவேண்டும்.

கேப்பாப்பிலவு மக்களின் காணிவிடுவிப்பு விடயம் தொடர்பில் நான் ஏற்கனவே ஜனாதிபதியுடன் பேசியிருக்கின்றேன். குறிப்பாக பாராளுமன்ற குழு அறையில் இடம்பெற்ற பாதுகாப்பு அமைச்சினுடைய அமைச்சுசார் ஆலோஙனைக்குழுக்கூட்டங்களில் இந்த கேப்பாப்பிலவு மக்களின் காணிவிடுவிப்பு விடயம் தொடர்பாக பலதடவைகள் வலியுறுத்தியிருக்கின்றேன்.

அந்தவகையில் ஜனதிபதியும் இந்துமக்களின் காணி விடுவிப்பு விடயத்தில் கூடுதல் கவனஞ்செலுத்தவேண்டும். கவனஞ்செலுத்துவார் என்றே நம்புகின்றோம்.

அந்த மக்களின் காணி இந்தமக்களுக்கே விடுவிக்கப்படவேண்டுமென்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம்.

கேப்பாப்பிலவு மக்களின் காணி விடுவிப்பிற்காக, எப்போதும் அந்த மக்களுடன் துணைநிற்பேன் – என்றார்.

Source: https://samugammedia.com/i-will-always-stand-with-the-people-struggling-for-the-release-of-their-lands–mp-ravikaran-1782569918

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.