முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கிண்ணியாவில் தனியார் காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்பு!

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலிம் வீதியில் அமைந்துள்ள தனியார் காணியிலிருந்து இரு மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த காணியில் வீடொன்றை நிர்மாணிப்பதற்காக அத்திவாரம் இடும் பணிகளுக்காக நேற்று (30) மாலை சுமார் 5.30 மணியளவில் நிலத்தைத் தோண்டியபோதே, இந்த இரு மோட்டார் குண்டுகளும் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கிண்ணியா ஆலிம் வீதியைச் சேர்ந்த முஹம்மத் ராபிக் மொஹம்மத் ரிபாஸ் என்பவருக்குச் சொந்தமான காணியிலேயே இக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் காணி உரிமையாளர் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, சம்பவ இடத்துக்கு கிண்ணியா பொலிஸார் விரைந்து சென்று பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில், இன்று (31) மாலை சம்பவ இடத்துக்கு வருகை தந்த திருகோணமலை – சர்தாபுர விசேட அதிரடிப்படை அணியினர், குறித்த இரு மோட்டார் குண்டுகளையும் பாதுகாப்பாக மீட்டு கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மீட்கப்பட்ட குண்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைப்பதற்கான மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்ட பகுதி தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்தப் பகுதியில் இராணுவ முகாம் ஒன்று அமைந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

அக்காலப்பகுதியில் குறித்த இராணுவ முகாம் விடுதலைப் புலிகளால் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அந்தச் சம்பவத்தில் இராணுவத்தினர் மற்றும் விடுதலைப் புலிகள் தரப்பில் உயிரிழப்புகள் மற்றும் பாரிய சேதங்கள் ஏற்பட்டதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் காரணமாக, தற்போது மீட்கப்பட்டுள்ள மோட்டார் குண்டுகள் நீண்டகாலமாக நிலத்துக்குள் புதைந்திருந்தவையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

எனினும், அவற்றின் பூர்வீகம் மற்றும் அவை எவ்வாறு அங்கு புதைக்கப்பட்டன என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://samugammedia.com/two-mortar-shells-recovered-from-private-land-in-kinniya-1788181742

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.