கடந்த காலங்களில் காணாமல் போனோர் தொடர்பான தகவல்கள் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கமைய மூதூர் பிரதேச செயலகத்தினால் பதிவு செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் மூதூர் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சம்பூர் பிரதேசத்தில் கடந்த காலத்தில் காணாமல் போனோர் தொடர்பான தகவல்களை பதிவு செய்யும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை (06) சம்பூரில் இடம்பெற்றது.
மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் இவ் பதிவு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இதில் அதிகளவான பொதுமக்கள் கலந்து கொண்டு காணாமல் போன தமது உறவுகளை பதிவு செய்தனர்.

