ப்ராடோ ஜீப் ஒன்று திருடப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராக அவரது மனைவியால் காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவி ஒரு சட்டத்தரணி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முறைப்பாட்டில், தனது வாகனம் அனுமதியின்றி எடுத்துச் செல்லப்பட்டு பயன்படுத்தப்படுவதாகவும், அது சட்டவிரோத செயல்களில் ஈடுபடலாம் என்ற பலத்த சந்தேகம் காணப்படுவதாகவும் மனைவி குற்றஞ்சாட்டியுள்ளார்.
விசாரணை
தனது கணவர் வாகனத்தை அனுமதியின்றி எடுத்துச் சென்றுள்ளதால், தனது பயண வசதிகளும் தடைபட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தனது கணவரான நாடாளுமன்ற உறுப்பினருக்கு மற்றொரு தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினருடன் தொடர்பு இருப்பதாகவும் குறித்த பெண் கூறியுள்ளார்.
அந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர பலமுறை எச்சரித்தும், கணவர் உறவை நிறுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள அவர், பொறுத்துக்கொள்ள முடியாததால், தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார்.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.