முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சீரற்ற வானிலை தீவிரம்: உயிரிழப்பு 7 ஆக உயர்வு; ஒருவர் மாயம்

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் அதனுடன் தொடர்புடைய அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. மேலும், ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் – பொல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மொரஹேனகம பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில், அங்கு வசித்து வந்த 47, 58 மற்றும் 83 வயதுடைய மூன்று பெண்களும், 22 வயதுடைய இளைஞர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

வட்டவளை, ஞானானந்தகம வீதியில் மகாவலி கங்கைக்கு குறுக்காக அமைந்துள்ள பாலத்தின் மீது பயணித்த 53 வயதுடைய நபர் ஒருவர் வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார்.

நாவலப்பிட்டி, சோலங்கந்த, ஜனஉதான கிராமத்தில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் குறிப்பிட்டுள்ளது.

மேலும், நாவலப்பிட்டி பஸ்பாகே கோரளை பகுதியில் வீடு ஒன்றின் மீது மண்சரிவு ஏற்பட்டதில் 67 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் கண்டி மாவட்ட பிரதிப் பணிப்பாளர் இந்திக ரணவீர நேற்று உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில், கினிகத்தேனை, அம்பகமுவ பகுதியில் 45 வயதுடைய நபர் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது. அவரைத் தேடும் பணிகள் தொடர்ந்துவருகின்றன.

சீரற்ற வானிலை காரணமாக மூவர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Source: https://samugammedia.com/severe-weather-intensity-death-toll-rises-to-7-one-person-missing-1785817974

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.