முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் தொடரும் – எரங்க குணசேகர

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பர்கர்கள் உள்ளிட்ட அனைத்து இன மக்களின் இதயங்களையும் ஒன்றிணைத்து ஒரு இலங்கை அரசாங்கத்தை கட்டியெழுப்ப முடிந்துள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்புப் பிரதியமைச்சரும் சோசலிச இளைஞர் முன்னணியின் தேசிய அமைப்பாளருமான எரங்க குணசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இனவாதப் பிரச்சினைகள் இன்றி அனைத்து மக்களும் ஒன்றிணைந்து செயற்படும் சூழலை உருவாக்க முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு பழைய மாவட்ட செயலகத்தில் 2026ஆம் ஆண்டின் சகோதரத்துவ நாளை முன்னிட்டு “இதயங்களின் பிணைப்பு, ஒன்றிணைந்த பயணம்” என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகள் தொடர்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், பர்கர்கள் மற்றும் மலாயர்கள் என பல்வேறு இன மக்கள் ஒன்றிணைந்து வாழ்ந்தாலும், கடந்த பல தசாப்தங்களாக இன அடிப்படையிலான அரசியல் காரணிகளால் மக்கள் பிரிக்கப்பட்டதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை தனித்தனியாக கையாண்டு மக்களை ஒன்றிணைப்பதற்குப் பதிலாக பிரித்தாளும் அரசியல் முன்னெடுக்கப்பட்டதாகவும், அதன் இறுதி விளைவாக நாடு பொருளாதார ரீதியில் பேரழிவை சந்தித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலை சம்பவத்தை மீண்டும் தோண்டித் துருவுவதற்காக சகோதரத்துவ நாள் அனுஷ்டிக்கப்படவில்லை எனக் குறிப்பிட்ட அவர், அந்தக் கசப்பான வரலாற்றிலிருந்து பாடம் கற்று, எதிர்காலத்தில் அவ்வாறான நிலைமைகள் ஏற்படாமல் தடுப்பதே இதன் நோக்கம் எனக் கூறினார்.

1983 கறுப்பு ஜூலை ஒரு தனிப்பட்ட சம்பவமல்ல என்றும், அது அரசியல் ரீதியாக திட்டமிடப்பட்ட சதி என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். அதேபோன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

30 ஆண்டுகால யுத்தத்தின் பின்னர் நாட்டுக்கு உடைந்த கட்டிடங்களும், பெற்றோர் மற்றும் கணவர்களை இழந்த குடும்பங்களுமே எஞ்சியதாகவும், அதனால் அரசியல்வாதிகள் மாத்திரமே பயனடைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த பல காணிகள் விடுவிக்கப்பட்டு, விவசாயம் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கம் உறுதியாக இருப்பதாகவும், சிறுபான்மையினருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்பட அரசாங்கம் இடமளிக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான சட்டப்பூர்வ விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதுடன், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலும் நடுநிலையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் வெளிக்கொண்டு வரப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் மக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

இதனிடையே, அரசியல் குற்றவாளிகள் மற்றும் ஊழல்வாதிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவதை எண்ணி அஞ்சுபவர்கள் ஒன்றிணைய முயற்சிப்பதாகக் குறிப்பிட்ட எரங்க குணசேகர, “ரணிலின் தலையும், சஜித்தின் உடலும், நாமலின் வாலும் சேர்ந்து ஒரு புதிய விசித்திரப் பிராணியை உருவாக்க முயல்கின்றனர். இதனால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை” என விமர்சித்தார்.

வரலாற்றில் முதன்முறையாக சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட்டு, அரசியல் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், ஊழலற்ற மற்றும் சகோதரத்துவமிக்க புதிய இலங்கையை நோக்கிய பயணம் தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, மதவாதம் மற்றும் இனவாதம் இல்லாத நாட்டை எதிர்கால சந்ததியினரிடம் கையளிப்பதற்கான வேலைத்திட்டங்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

Source: https://samugammedia.com/actions-to-release-the-ancestral-lands-of-tamil-people-will-continue–erang-gunasekar-1785063895

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.