முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தரமற்ற நிலக்கரியுடன் வந்த கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது – மின் உற்பத்திக்கு பாதிப்பா?

நாட்டிற்கு அவசர கொள்முதல் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட நிலக்கரி கப்பல்களில் ஒன்று தரமற்ற நிலக்கரியை ஏற்றிவந்ததாக உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சின் செயலாளர் ஜி.எம்.ஆர்.டி. அப்பொன்ஸு தெரிவித்துள்ளார்.

இந்திய நிறுவனமொன்றிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஐந்து நிலக்கரி கப்பல்களில் ஒரு கப்பல் மட்டுமே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த கப்பலில் கொண்டுவரப்பட்ட நிலக்கரிக்கான தரச்சான்றிதழ் தேவையான தரநிலைகளை பூர்த்தி செய்யவில்லை என உறுதி செய்யப்பட்ட பின்னரே அந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

திருப்பி அனுப்பப்பட்ட கப்பலுக்குப் பதிலாக புதிய நிலக்கரி கப்பல் ஒன்றை இலங்கைக்கு அனுப்புவதாக சம்பந்தப்பட்ட நிறுவனம் உறுதியளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

எனினும் கடல் சீற்றம் காரணமாக மாற்று கப்பல் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 22 நிலக்கரி கப்பல்களில் இருந்த சரக்குகள் வெற்றிகரமாக இறக்கப்பட்டுள்ளதாகவும், 23ஆவது கப்பலில் உள்ள நிலக்கரியும் நாளை இறக்கப்படலாம் எனவும் செயலாளர் குறிப்பிட்டார்.

மேலும், எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை தடையின்றி மின்சார உற்பத்தியை முன்னெடுக்க தேவையான குறைந்தபட்ச நிலக்கரி கையிருப்பு நாட்டில் இருப்பதாகவும், அதுவரை அவசர மின் கொள்முதல் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

Source: https://samugammedia.com/the-ship-that-came-with-substandard-coal-was-turned-back–will-it-affect-electricity-production-1782032231

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.