முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

துபாயிலிருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட லலித் கண்ணங்கரா – பொலிஸார் விசேட தகவல்

துபாயிலிருந்து இன்று (25) இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் போதைப்பொருள் கடத்தல்காரரான லலித் கண்ணங்கரா தொடர்பில் பொலிஸார் விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தியுள்ளனர்.

கடந்த 2025ஆம் ஆண்டு ஒக்டோபர் 25ஆம் திகதி பொலிஸ் மா அதிபருக்கு (IGP) கிடைத்த விசேட தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் ஊடாக சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான எப். யு. உட்லர் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர் மீது போதைப்பொருள் கடத்தல், கொலை மற்றும் கொலை முயற்சி, கடுமையான உடல் காயம் ஏற்படுத்துதல், மிரட்டிப் பணம் பறித்தல் மற்றும் தீவைப்பு உள்ளிட்ட பல்வேறு பாரதூரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் மத்திய குற்றப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவரால் சட்டவிரோதமாகச் சம்பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் சொத்துக்கள் தொடர்பிலும் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, 2024ஆம் ஆண்டு முதல் இன்டர்போல் சிவப்பு அறிவித்தல் (Red Notice) பிறப்பிக்கப்பட்டிருந்த 42 சந்தேகநபர்களை இலங்கைக்கு அழைத்து வர பொலிஸாரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டுள்ள 109 சந்தேகநபர்களை எதிர்காலத்தில் இலங்கைக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்படாத 38 சந்தேகநபர்களையும் ஏற்கனவே பொலிஸார் இலங்கைக்கு அழைத்து வந்துள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் மேலும் பல சந்தேகநபர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் தனிநபர்களால் சட்டவிரோதமாகச் சேர்க்கப்பட்டதாகக் கூறப்படும் சுமார் 3,878 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி, 2024ஆம் ஆண்டில் சுமார் 1,549 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், 2025ஆம் ஆண்டில் மேலும் 1,549 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை கையகப்படுத்துவதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சொத்துக்கள் தொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் குறித்த சொத்துக்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Source: https://samugammedia.com/lalith-kannangara-brought-from-dubai-to-sri-lanka–police-special-report-1787644623

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.