முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பரதநாட்டிய கின்னஸ் சாதனை சர்ச்சை: அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை! நிறுவனர் தினேஷ்குமார் விளக்கம்

சங்கமம் குளோபல் அகாடமி மற்றும் சங்கமிலியா ஹாலிடேஸ் நிறுவனங்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களிலும் சில ஊடகங்களிலும் பரவி வரும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், அதன் நிறுவனர் கே. தினேஷ்குமார் கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் விரிவான விளக்கமளித்தார்.

அண்மையில் கொழும்பு காலி முகத்திடலில் 5,000-க்கும் மேற்பட்ட மாணவர்களின் பங்கேற்புடன் நடைபெற்ற பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்வு கின்னஸ் உலக சாதனையாக வெற்றிகரமாகப் பதிவானதாகவும், இலங்கைக்கு சர்வதேச அளவில் பெருமை சேர்த்த இந்த நிகழ்வு குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கின்னஸ் சாதனைக்கான பதிவுக் கட்டணமாக 5,000 அல்லது 6,000 ரூபாய் வசூலிக்கப்பட்டதாக கூறப்படும் தகவல்கள் உண்மையற்றவை என மறுத்த அவர், 4,100 மாணவர்களிடமிருந்து தலா 4,500 ரூபாய் மட்டுமே பெறப்பட்டதாகக் கூறினார். கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள் ஆசிரியர்களின் பரிந்துரையின் அடிப்படையில் எவ்வித கட்டணமும் இன்றி நிகழ்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.

சேகரிக்கப்பட்ட அனைத்து நிதிகளும் இலங்கையிலுள்ள சங்கமிலியா நிறுவனத்தின் கணக்கிலேயே வரவு வைக்கப்பட்டதாகவும், இந்திய நிறுவனத்திற்கோ அல்லது தனிநபர்களுக்கோ எந்த நிதியும் அனுப்பப்படவில்லை என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், அனைத்து வரவு-செலவு கணக்குகளும் முறையாகப் பராமரிக்கப்பட்டு வருவதாகவும், அரசாங்கத்திடம் எந்தவித நிதி உதவியும் கோரப்படவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்நிகழ்வு அரசாங்கத்தின் நிகழ்வு அல்ல; தனியார் அமைப்பின் முயற்சியாக நடத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தேவையான அனுமதிகள் மற்றும் பொலிஸ் பாதுகாப்பைப் பெறுவதற்கு மட்டுமே பிரதி அமைச்சர் பிரதீப் சுந்தரலிங்கம் ஒத்துழைப்பு வழங்கியதாக கூறினார்.

கின்னஸ் சான்றிதழில் மாணவர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை என்ற குற்றச்சாட்டுக்கும் பதிலளித்த அவர், கின்னஸ் இணையதளத்தில் சாதனை சான்றிதழ் நிறுவனம், ஆசிரியர்கள் மற்றும் பங்கேற்ற மாணவர்கள் என்ற பொதுவான அடிப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தனிப்பட்ட பெயருடன் அசல் அல்லது மின் சான்றிதழ் பெற விரும்பும் மாணவர்கள், கின்னஸ் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்தைச் செலுத்தி நேரடியாகப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும், இந்த நடைமுறை குறித்து ஆரம்பத்திலேயே பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், கலாச்சார நிகழ்வை அரசியல் நோக்கத்துடன் சிலர் தவறாக சித்தரித்து, நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய தினேஷ்குமார், இதனால் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்தார்.

எனவே, நிறுவனத்துக்கும் நிகழ்வுக்கும் எதிராக அவதூறு பரப்பியவர்களுக்கு எதிராக ஆசிரியர்களுடன் கலந்தாலோசித்து சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் சங்கமம் குளோபல் அகாடமியின் நிறுவனர் கே. தினேஷ்குமார் அறிவித்தார்.

Source: https://samugammedia.com/bharatanatyam-guinness-record-controversy-legal-action-against-those-spreading-rumors-founder-dinesh-kumar-explains-1782625649

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.