முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பஸூகா திரை விமர்சனம்

மெகா ஸ்டார் மம்மூட்டி, கௌதம் மேனன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘பஸூகா’ மலையாளப் படத்தின் விமர்சனத்தை பார்ப்போமா.

கதைக்களம்

கேரளாவில் இருந்து பெங்களூரு செல்லும் பஸ்ஸில் ஏறும் மம்மூட்டி, தனக்கு பக்கத்துக்கு சீட்டில் அமர்ந்திருக்கும் கேமர் சன்னி வர்கீஸிடம் அறிமுகமாகிறார்.

பஸூகா திரை விமர்சனம் | Bazooka Movie Review

ஒரு கட்டத்தில் மம்மூட்டியின் லேப்டாப்பை வாங்கும் சன்னி, அவர் தூங்கியதும் சீக்ரெட் ஃபைல்ஸை திறந்துபார்த்து ஷாக் ஆகிறார்.

பின்னர் மம்மூட்டியிடம் நீங்கள் யார்? உண்மையை சொல்லுங்கள் என துருவி துருவி கேட்க, தான் ஒரு முன்னாள் ஃபாரன்சிக் ஆபிசர் என்று கூறுகிறார்.

மேலும், அசிஸ்டென்ட் கமிஷனர் கௌதம் மேனனுடன் இணைந்து கொள்ளை வழக்குகளில் பணியாற்றுவதாகவும், ஒவ்வொரு கொள்ளை சம்பவமும் எப்படி நடந்தது அடுத்த டார்கெட் என்னவென்று தெரியவில்லை என சன்னியிடம் அவர் விளக்குகிறார்.

இதற்கிடையில் பஸ்ஸில் வந்த இருவரை மஃப்டியில் இருந்த போலிஸ் திடீரென கைது செய்ய முயற்சிக்க, பஸ்ஸை மறிக்கும் ஒரு கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்துகிறது.

அதில் இருந்து ஒருவரை மம்மூட்டி காப்பாற்ற முயற்சிக்க, அவரை நோக்கியும் அந்த கும்பல் துப்பாக்கியால் சுட ஒருவழியாக அவர் தப்பிக்கிறார்.

கௌதம் மேனனும் தலைவலியை கொடுக்கும் கொள்ளை கும்பலை மம்மூட்டி கண்டுபிடித்தாரா? இறுதியில் என்ன ஆனது என்பதே மீதிக்கதை.

படம் பற்றிய அலசல்

டீனோ டென்னிஸ் என்ற அறிமுக இயக்குநர் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

மெகா ஸ்டார் மம்மூட்டிக்கு எப்படி மாஸ் சீன்ஸ் வைக்க வேண்டுமோ அதை கச்சித்தமாக வைத்துள்ளார்.

ஹைவேஸ் ரோட்டில் பைக் சாகசம் செய்து சில இளைஞர் விபத்தை ஏற்படுத்துகின்றனர். அவர்களை மம்மூட்டி புரட்டியெடுக்கும் ஃபைட் சீன், உங்களுக்கு இன்னும் வயசு ஆகல சாரே என்று நம்மை கூற வைக்கிறது.

அத்துடன் 73 வயசுல எப்படி இந்த மாதிரி கேரக்டர் எல்லாம் பண்றீங்க என்று கேட்க தோன்றுகிறது.

கௌதம் மேனன் மிடுக்கான போலீசாக சிறப்பாக நடித்துள்ளார். அவர் இன்வெஸ்டிகேஷன் செய்யும் காட்சிகள் நன்றாக இருக்கிறது.

இடைவேளை வரை மம்மூட்டிக்கு எதற்கு கொள்ளை கும்பல் பற்றி ஹக்கீம் ஷாவிடம் (சன்னி வர்கீஸ்) விளக்கும் காட்சிகள் சற்று பொறுமையை சோதிக்கின்றன.

எனினும், இரண்டாம் பாதியில் வரும் ட்விஸ்ட் நம்மை அசர வைக்கிறது.

அதேபோல் மம்மூட்டியின் சில மேனரிசம் அவரை புதிதாக பார்க்க வைக்கிறது.

வீடியோ கேமை வைத்து கதைக்களத்தை அமைத்திருக்கிறார் இயக்குநர். அந்த கேம் மூலம்தான் அந்த கும்பலை பிடிக்க முடியும் என்பது நல்ல முயற்சி.

நிஷாத் யூசுப், பிரவீன் பிரபாகர் ஆகிய இருவரும் எடிட்டிங்கில் கொஞ்சம் கத்திரி போட்டிருக்கலாம்.

சயீத் அப்பாஸின் இசையும், நிமிஷ் ரவி மற்றும் ராஃபி வர்கீஸின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம்.

க்ளாப்ஸ்

மம்மூட்டியின் நடிப்பு மற்றும் ஆக்ஷன்

பிரீ கிளைமேக்ஸ் ட்விஸ்ட்

பின்னணி இசை

பல்ப்ஸ்

நீளும் சில காட்சிகள்

மொத்தத்தில் மம்மூட்டி ஆடும் இந்த பஸூகா கேமை நாமும் ரசிக்கலாம், ஒருமுறை பார்க்கக்கூடிய படம்தான்.  

ரேட்டிங்: 3/5 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.