முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பலத்த காற்றுடன் கொந்தளிக்கும் கடல்; நாளை வரை ஆபத்து! அவசர எச்சரிக்கை

இலங்கையைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் நிலவக்கூடிய பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை குறித்து வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை இடர்கள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை மையத்தினால் விசேட அறிவுறுத்தல்  விடுக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் 10:30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த எச்சரிக்கை அறிவிப்பானது, நாளை  முற்பகல் 10:30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவிலிருந்து காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவிலுக்கான கடற்கரைக்கு அப்பாற்பட்ட கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும். இதன் காரணமாக, இக்கடல் பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பானதாக காணப்படும்.

குறித்த கடல் பிராந்தியங்களில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் கடற்றொழிலாளர்களும், கடற்படை சமூகத்தினரும் இவ்விடயம் குறித்துப் பெரும் விழிப்புடனும், அவதானத்துடனும் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை இன்று (02) மாலை முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும், இப்பகுதிகளின் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். 

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 30-40 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Source: https://samugammedia.com/the-sea-raging-with-strong-winds-danger-until-tomorrow-urgent-warning-1780382296

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.