முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

போக்குவரத்து அமைச்சின் 25 வாகனங்கள் மாயம் : அறிக்கையில் வெளியான தகவல்

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் பெயரில் பதிவு செய்யப்பட்ட 25 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் (Auditor General’s Department) தெரிவித்துள்ளது.

அதன்படி, 10 கார்கள், 10 கெப் வாகனங்கள், 02 ஜீப் வாகனங்கள், 02 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் லொறி ஒன்று காணாமல் போயுள்ளதாக அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனை தற்போது பயன்படுத்தும் தரப்பினர் குறித்த தகவல்களை வெளியிட முடியாது எனவும் கணக்காய்வு மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சு

அத்துடன் இந்த வாகனங்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் தணிக்கையில் வெளிப்படுத்தவில்லை என்றும் தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சின் 25 வாகனங்கள் மாயம் : அறிக்கையில் வெளியான தகவல் | 25Vehicles Not Include In The Transport Min Assets

அமைச்சகத்தின் போக்குவரத்துப் பிரிவு இது தொடர்பாக நிதி விதிமுறைகளின்படி செயல்படவில்லை என்றும், இந்த வாகனங்கள் 31 டிசம்பர் 2023 நிலவரப்படி அமைச்சகத்தின் வாகனப் பட்டியல் மற்றும் சொத்துக் கணக்கில் சேர்க்கப்படவில்லை என்றும் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

இதன் காரணமாக, 2023 ஆம் ஆண்டுக்கான கணக்குகளில் சேர்க்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதாக தணிக்கையில் தெரியவந்துள்ளது.

கணக்காய்வு அறிக்கை

மேலும், அமைச்சின் போக்குவரத்துப் பிரிவிற்குச் சொந்தமான 15 கார்கள் ஏனைய அரச நிறுவனங்களால் பிரத்தியேகமாக பயன்படுத்தப்பட்ட போதிலும், இந்த வாகனங்கள் முறையாக ஒப்படைக்கப்படவோ அல்லது மீட்கப்படவோ இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சின் 25 வாகனங்கள் மாயம் : அறிக்கையில் வெளியான தகவல் | 25Vehicles Not Include In The Transport Min Assets

33.7 மில்லியன் ரூபா பெறுமதியான 08 வாகனங்களும், இனி கணக்கில் வராத 07 வாகனங்களும் உள்ளதாகவும் கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டிற்கான போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட செயல்திறன் அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள தணிக்கை அறிக்கையில் மேற்குறிப்பிட்ட தகவல் சேர்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.