சமூக வலுவூட்டல் மற்றும் பாதுகாப்பிற்கான அமைப்பு ( IMSESO) மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மனநலப் பிரிவுடன் இணைந்து ஏற்பாடு செய்த வாழ்வை நேசிப்போம் எனும் தொனிப்பொருளில் உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு நடைபவனி இன்று வியாழக்கிழமை (10) காலை 9 மணியளவில் மன்னாரில் இடம் பெற்றது.
சமூக வலுவூட்டல் மற்றும் பாதுகாப்பிற்கான அமைப்பின் ( IMSESO)இயக்குனர் சந்தியோகு கொண்சன்டைன் தலைமையில் இன்று வியாழக்கிழமை (10) காலை 9 மணியளவில் மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் இருந்து உலக தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு நடைபவனி ஆரம்பமானது.
குறித்த நடை பவனியில் மத தலைவர்கள்,பாடசாலை மாணவர்கள்,ன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் மனநலப் பிரிவினர் உள்ளடங்களாக பலர் கலந்து கொண்டனர்.
மன்னார் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான குறித்த விழிப்புணர்வு பேரணி மன்னார் பொது வைத்தியசாலை வீதியூடாக சென்று மன்னார் நகர பேருந்து தரிப்பிடத்தை சென்றடைந்தது.
குறித்த பேரணியில் கலந்து கொண்டவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு காணப்பட்டனர்.
தொடர்ந்து பஜார் பகுதியில் விழிப்புணர்வு நிகழ்வு இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
Source: https://samugammedia.com/world-suicide-prevention-day-awareness-walk-held-in-mannar-1789034436

