முன்னாள் அமைச்சர் ஒருவரின் ஊடகச் செயலாளராகப் பணியாற்றிய நபர் ஒருவர் அரச சொத்துகளை துஷ்பிரயோகம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொழும்பு 02 பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் போது, இவர் சிவில் பாதுகாப்பு மற்றும் பொது வசதிகள் அமைச்சின் ஊடகச் செயலாளராக பணியாற்றிய காலப்பகுதியில், அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் பணிகளுக்காக வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வாகனங்களை ஊடக நடவடிக்கைகளுக்காக தவறாக பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
இதன் மூலம் சுமார் 17 இலட்சத்து 46 ஆயிரம் ரூபாய் அளவிலான அரச நிதி துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் CID நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Source: https://samugammedia.com/former-media-secretary-arrested-by-cid-1780728357

