பொதுப் போக்குவரத்து துறையில் மின்னணு கட்டண முறையை அறிமுகப்படுத்தவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
வங்கி அட்டைகள்
இந்த முயற்சி பணப் பயன்பாட்டைக் குறைத்து பயணிகளுக்கு அதிக வசதியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைமை மூலம், வங்கி அட்டைகளை பயன்படுத்தி பணம் செலுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்காலத்தில் ஒவ்வொரு பேருந்திலும் மின்னணு கட்டண சாதனங்கள் நிறுவப்படும் என்று போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.