2006 ஆம் ஆண்டு இடம்பெற்ற மூதூர் பட்டினிக்கு எதிரான சர்வதேச அமைப்பின் (Action against hunger) தன்னார்வ தொண்டாளர்கள் 17 பேரின் படுகொலைச் சம்பவத்தின் 20வது ஆண்டு நினைவேந்தல் மூதூரிலுள்ள தனியார் மண்டபத்தில் இன்று சனிக்கிழமை (08) இடம்பெற்றது.
இதனை உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், பொதுமக்கள் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வின் போது உயிரிழந்த 17 தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்களின் உருவப்படத்திற்கு மலர்தூவி, தீபமேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்தோடு படுகொலை செய்யப்பட்ட இடத்திற்குச் சென்று மெழுகுவர்த்தி ஏற்றி நினைவஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீ நேசன், வைத்தியர் ஸ்ரீநாத் மற்றும் வேலன் சுவாமிகள், இந்து மத தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






Source: https://samugammedia.com/muthur-17-volunteer-killings-20th-year-remembrance-1786181362

