முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் இன்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணையொன்றின் அடிப்படையில் வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று முற்பகல் ஆணைக்குழுவில் முன்னிலையானதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் அனுமதிக்கப்பட்ட பணியாளர் எண்ணிக்கைக்கு மேலதிகமாக 6 பேரை பணியில் அமர்த்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக கெஹெலிய ரம்புக்வெல்ல மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
Source: https://samugammedia.com/former-minister-keheliya-who-was-due-for-questioning-arrested-1787039951

