புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்ட உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில், ‘மெட்டா ‘ நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜுக்கர்பெர்க் 2வது இடத்தை பிடித்துள்ளார்.
புளூம்பெர்க் நிறுவனம் உலகளவில் கோடீஸ்வரர்களின் பட்டியலை வாரந்தோறும் வெளியிட்டு வருகிறது.
கடந்த வாரம் வெளியான பட்டியலில், டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ., எலான் மஸ்க் முதலிடத்தில் இருந்தார்.
இந்த வாரம் வெளியான பட்டியலிலும் எலான் மஸ்க் 256 பில்லியன் டொலருடன் முதலிடத்தில் உள்ளார்.
மார்க்ஜுக்கர்பெர்க்
2வது இடத்திற்கு அமெரிக்காவை சேர்ந்த மெட்டா நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ., ஆன மார்க்ஜுக்கர்பெர்க் முன்னேறி உள்ளார்.
அவரின் சொத்து மதிப்பு 206 பில்லியன் டொலர்களுடன் உள்ளார்.
கடந்த சில ஆண்டுகளில் , சமூக வலைதளங்களில் அதிகம் வளர்ந்த நிறுவனமாக மெட்டா உருவெடுத்து உள்ளது.
மாதந்தோறும் 30 கோடி பேர் இதனை பயன்படுத்தி வருகின்றனர்.
உலகின் 7 வது பெரிய தனியார் நிறுவனமாக உருவெடுத்து உள்ளது.
பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா, பின்நாளில் இன்ஸ்டாகிராம் மற்றும் வட்ஸ் ஆப் ஆகியவற்றை கையகபடுத்தியது.
சொத்து மதிப்பு
இந்நாள் வரை 2வது இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ், இம்முறை 3வது இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளார்.அவரது சொத்து மதிப்பு 205 பில்லியன் டொலர்களாகும்.
4வது இடத்தில் பிரான்சின் பெர்னார்ட் அர்னால்ட்- 193 பில்லியன் டொலர்
5வது இடத்தில் அமெரிக்காவின் லாரி எலிசன்- 179 பில்லியன் டொலர்
6வது இடத்தில் அமெரிக்காவின் பில்கேட்ஸ் -163 பில்லியன் டொலர்
7 வது இடத்தில் அமெரிக்காவின் லாரி பேஜ் -150 பில்லியன் டொலர்
8 வது இடத்தில் அமெரிக்காவின் ஸ்டீவ் பால்மர்- 145 பில்லியன் டொலர்
9வது இடத்தில் அமெரிக்காவின் வாரன் பப்பெட்- 143 பில்லியன் டொலர்
10 வது இடத்தில் அமெரிக்காவின் செர்ஜி பிரின் -141 பில்லியன் டொலர் சொத்துகளுடன் உள்ளனர்.