முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் வாக்குரிமை தொடர்பில் முக்கிய வலியுறுத்தல்

கொழும்பில் நடைபெற்ற “வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் வசிக்கும் நாடுகளிலிருந்தே வாக்களித்தல் தொடர்பான பிராந்திய மாநாடு 2026 (Overseas Voting – OCV)” சர்வதேச மாநாட்டின் விருந்தினர் வரவேற்பு நிகழ்வில் உரையாற்றிய பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களின் வாக்குரிமையை உறுதி செய்வதில் வெளிப்படைத்தன்மை மற்றும் மக்கள் நம்பிக்கைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தாங்கள் வசிக்கும் நாடுகளிலிருந்தே வாக்களிக்கும் வகையிலான வேலைத்திட்டங்களை எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தும்போது, தேர்தல் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மையையும் பொதுமக்களின் நம்பிக்கையையும் உறுதி செய்வது மிகவும் அவசியம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வெளியே பெருமளவிலான இலங்கையர்கள் வாழ்ந்து வருவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், அவர்களுக்கும் தாய்நாட்டிற்கும் இடையிலான உறவு புவியியல் எல்லைகளைத் தாண்டியதாகும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் தங்களது குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் நாட்டின் எதிர்காலத்துடன் தொடர்ந்தும் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ள நிலையில், அவர்களின் வாக்களிப்பு உரிமையை உறுதி செய்வதற்கான எதிர்கால நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் மக்கள் நம்பிக்கைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, ஏனைய நாடுகளின் அனுபவங்களிலிருந்து இலங்கை கற்றுக்கொள்ள வேண்டிய பல விடயங்கள் காணப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நடைமுறைகளை ஆராய்வதன் ஊடாக, உலகளாவிய இலங்கை சமூகத்தின் தற்போதைய யதார்த்தங்களுக்கு ஏற்ற வகையில் நாட்டின் தேர்தல் சட்டக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு இந்த மாநாடு முக்கிய பங்களிப்பை வழங்கும் எனவும் பேராசிரியர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

Source: https://samugammedia.com/key-emphasis-on-the-voting-rights-of-sri-lankans-living-abroad-1788421669

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.