42 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கடத்த முற்பட்ட வெளிநாட்டுப் பெண் ஒருவர் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட சந்தேக நபர் இன்று (29) அதிகாலை சீனாவின் குன்மிங் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தப் பெண் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து சீனாவில் தயாரிக்கப்பட்ட 28,000 சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் கண்டெடுத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 40 வயதுடைய சீன நாட்டு பெண் தொழிலதிபர் எனத் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Source: https://samugammedia.com/chinese-woman-arrested-with-foreign-cigarettes-1782722993

