எதிர்நீச்சல் தொடர்கிறது
ஒரு சீரியல் எடுத்தால் அடுத்தடுத்து விறுவிறுப்பின் உச்சமாக செல்ல வேண்டும், அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற பரபரப்பு இருக்க வேண்டும் என ரசிகர்கள் இப்போது அதிகம் எதிர்ப்பார்க்கிறார்கள்.
அப்படி ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்.
கடந்த ஒரு வாரமாக தர்ஷன் திருமண பரபரப்பு சென்று கொண்டிருக்க தற்போது திருமணமும் ஈஸ்வரி ஆசைப்படி நடந்துவிட்டது.

நியூ என்ட்ரி
தர்ஷன் திருமண கதைக்களம் முடிவதற்குள் குணசேகரன் மறைத்து வைத்த ரகசியம் ஒன்று அடுத்து வெடிக்கப்போகிறது என்ற லீட் சில வாரங்களுக்கு முன்பே இயக்குனர் தெரிவித்துவிட்டார்.

சக்தி கையில் சிக்கிய கடிதம் எழுதியது ஒரு பெண், அவர் யார் என்ன நடந்தது என்பது தான் அடுத்த கேள்விக்குறியாக உள்ளது.
தற்போது என்ன தகவல் என்றால் திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் சீரியல் புகழ் ஆதி, எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் என்ட்ரி கொடுக்க இருப்பதாக தரமான செய்தி சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

இவர் கடிதத்தில் இருந்த பெண்ணின் மகனாக என்ட்ரி கொடுத்து வில்லத்தனத்தில் குணசேகரனுக்கு டப் கொடுப்பார் என கூறப்படுகிறது.
View this post on Instagram
ஆதி Vs குணசேகரன் என்றால் இந்த சீரியல் Talk Of The Town ஆக இருக்கும் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

