காக்கி சட்டை
ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா, பிரபு, இமான் அண்ணாச்சி, கல்பனா என பலர் நடிக்க கடந்த 2015ம் ஆண்டு வெளியான படம் காக்கி சட்டை.
ஒரு போலீஸ் அதிகாரியாக சமூகத்தில் முக்கிய பிரச்சனையாக பார்க்கப்படும் ஒரு விஷயத்தை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது.
அனிருத் இசையமைப்பில் வெளியான இப்படத்தை வுண்டர்பார் ஃபிலிம்ஸின் கீழ் தனுஷ் தயாரித்துள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ்
அனிருத் இசையில் வெளியான இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே செம ஹிட் தான்.
பிப்ரவரி 27, இன்றோடு ரிலீஸ் ஆகி 10 வருடத்தை எட்டிவிட்டது.
இந்த படம் அப்போது மொத்தமாக ரூ. 40 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.