முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பாகிஸ்தான் தொடருந்து சிறைபிடிப்பு : 100 ற்கும் மேற்பட்ட பயணிகள் மீட்பு : தொடரும் மோதல்

பாகிஸ்தானில்(pakistan) தொடருந்தில் சிறைபிடிக்கப்பட்டவர்களில் 104 பேரை இன்று(12)புதன்கிழமை காலை நிலைவரப்படி அந்நாட்டு படையினர் மீட்டுள்ளதுடன் துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 16 பேர் கொல்லப்பட்டனர்.

மீட்கப்பட்டவர்களில் 17 காயமடைந்த பயணிகள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதிகள் விதித்த நிபந்தனை

பலூச் அரசியல் கைதிகளை அதிகாரிகள் 48 மணி நேரத்திற்குள் விடுவிக்காவிட்டால் பணயக்கைதிகளைக் கொன்றுவிடுவதாக தீவிரவாதிகள் மிரட்டியதாக உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாகிஸ்தான் தொடருந்து சிறைபிடிப்பு : 100 ற்கும் மேற்பட்ட பயணிகள் மீட்பு : தொடரும் மோதல் | 100 Passengers Rescued Pakistan Train Attack

பலுச் விடுதலை படையைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தொடருந்தை முற்றுகையிட்டனர். அவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் தொடருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.

தொடருந்தில் இருந்த பெண்கள், குழந்தைகள் உட்பட, 450 பயணியரை பயங்கரவாதிகள் சிறைபிடித்தனர். அதன்பின், சிலரை விடுவித்துவிட்டு, 182 பேரை மட்டும் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்தனர்.

மீட்கும் பணியில் பாகிஸ்தான் இராணுவம்

அவர்களை மீட்கும் பணியில் பாகிஸ்தான் இராணுவம் ஈடுபட்டுள்ளது. இராணுவத்துக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையினர் 30 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் தொடருந்து சிறைபிடிப்பு : 100 ற்கும் மேற்பட்ட பயணிகள் மீட்பு : தொடரும் மோதல் | 100 Passengers Rescued Pakistan Train Attack

தற்போது மோதலுக்கு இடையே பெண்கள் 31 பேர், குழந்தைகள் 15 பேர் உட்பட 104 பேரை பாதுகாப்பு படையினர் மீட்டனர். பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் 16 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்