Courtesy: Devshanth
உலகின் முதல் தமிழ் பேராசிரியர் என்ற பெருமையினைக் கொண்ட முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் (Swami Vipulananda) 132ஆவது ஜனன தினம் மட்டக்களப்பில் (Batticaloa) அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது, சுவாமி விபுலானந்தர் நூற்றாண்டு விழா சபையினரின் ஏற்பாட்டில் இன்றையதினம் (03.05.2024) இடம்பெற்றுள்ளது.
இதன்போது, சமாதியில் சுவாமிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சுவாமி விபுலானந்தரின் நூல்கள்
மேலும், சுவாமி விபுலானந்தர் எழுதிய நூல்களை மீண்டும் வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு இராம கிருஷ்ண மிசனின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தா ஜி மஹராஜ் கூறியுள்ளார்.
முல்லைத்தீவு பாடசாலை பதிலதிபரின் பாராமுகம்: எழுந்துள்ள விமர்சனம்
பாதுகாப்பற்ற பயணத்தால் பாடசாலை மாணவர் உயிரிழப்பு: இருவர் வைத்தியசாலையில் அனுமதி
இலங்கை – இந்திய கப்பல் சேவை தொடர்பில் வெளியான தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |