கண்டியில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் 33 பேரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கண்டி – பாதஹேவாஹெட்ட தொகுதியில் அக்கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து வாகன பேரணியில் பங்கேற்விருந்த போது, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்தோடு, அம்பிட்டிய பகுதியில் இதற்காக தயார் நிலையில் வைத்திருந்த 08 வாகனங்களையும் கண்டி தலைமையக காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலதிக விசாரணை
இதன்போது, வேட்பாளர்களின் உருவப்படங்கள் மற்றும் பல்வேறு கொடிகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் கண்டி தலைமையக காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.