முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலகை உலுக்கிய விமான விபத்து – 179 பேர் பலி – பயணியின் இறுதி குறும்செய்தி

தென்கொரியாவில் (South  Korea) 181 பேர் பயணித்த விமானம் முவான் விமான நிலையத்தில் கோர விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது.

விமானம் விபத்தில் சிக்குவதற்கு சற்று முன்பாக அதில் இருந்த பயணி ஒருவர் தனது குடும்ப உறுப்பினருக்கு அனுப்பிய குறுஞ்செய்தி கிடைத்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த குறுஞ்செய்தியில் விமானத்தில் இறக்கையில் ஒரு பறவை மோதியதாக அந்த பயணி குறிப்பிட்டிருந்ததுடன் “எனது கடைசி வார்த்தைகளை அனுப்ப வேண்டுமா?” என்றும் குறுந்தகவலில் அந்த பயணி கூறியிருந்ததாக உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சறுக்கிக் கொண்டே ஓடுபாதையில்

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில், தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள் 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு இன்று விமானம் வந்து கொண்டிருந்தது.

உலகை உலுக்கிய விமான விபத்து - 179 பேர் பலி - பயணியின் இறுதி குறும்செய்தி | 179 People Killed In Plane Crash In South Korea

முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்த போது விமானம் விபத்துக்குள்ளானது. லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டதால் தரையிறங்கிய போது விமானம் விபத்துக்குள்ளானது. 

சர்வதேச ஊடகங்களில் வெளியான காணொளியில் விமானம் சறுக்கிக்கொண்டே ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவரில் மோதுவது தெரிகிறது. பின்னர் இந்த விமானத்தில் தீப்பிடித்தது.

பறவை மோதல் அல்லது மோசமான வானிலை விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

விபத்துக்கான சரியான காரணம்

இந்நிலையில் விமான விபத்தை சமாளிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதாக ஜேஜூ ஏர் நிறுவன சி.இ.ஓ. கிம் இ-பே தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவளிப்பதே எங்களின் முதன்மையான முன்னுரிமை.

உலகை உலுக்கிய விமான விபத்து - 179 பேர் பலி - பயணியின் இறுதி குறும்செய்தி | 179 People Killed In Plane Crash In South Korea

விபத்தில் உயிரிழந்த பயணிகளுக்கும், அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் எங்களது ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம். தற்போது, விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை, 

மேலும் அரசு நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ விசாரணைக்காக நாங்கள் காத்திருக்க வேண்டும். காரணம் எதுவாக இருந்தாலும்,  தலைமை நிர்வாக அதிகாரியாக நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மருத்துவமனையில் அனுமதி

இந்த விபத்தில் இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் எனவும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் ஒரு தீயணைப்பு துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

உலகை உலுக்கிய விமான விபத்து - 179 பேர் பலி - பயணியின் இறுதி குறும்செய்தி | 179 People Killed In Plane Crash In South Korea

இந்த விபத்தில் உயிர் பிழைத்த இருவரும் விமானக் குழுவை சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளது.

விமான விபத்தில் 2 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்ட சூழலில் 179 பேர் உயிரிழந்துள்ளதாக என தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

You may like this,

https://www.youtube.com/embed/VaFxAUVcPio?start=135

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.