முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

1991 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

1991 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே காணலாம்.

தளபதி:

மணிரத்னம் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான இப்படம் கடந்த 1991 -ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. ரஜினிகாந்த் கேரியரில் வெளிவந்த பெஸ்ட் படங்களில் இந்த படமும் ஒன்று. இப்படத்தில் மம்முட்டி, ஷோபனா, அரவிந்த்சாமி எனப் பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.

இளையராஜாவின் இசையில் இப்படத்தில் வெளிவந்த ஒவ்வொரு பாடலும் இன்றும் ரசிகர்களின் பேவரைட் லிஸ்டில் உள்ளது. இப்படத்தில் வரும் சூர்யா – தேவா நண்பர்கள் காட்சி 90ஸ் கிட்ஸ் முதல் 2K கிட்ஸ் வரை பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.

1991 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 1991 Best Tamil Movies

குணா:

சந்தான பாரதி இயக்கத்தில் கமல்ஹாசன், ரேகா, புதுமுக நடிகை ரோஷினி என பலர் நடிக்க 1991ம் ஆண்டு வெளியான படம் குணா. இந்த படத்தில் மிகவும் ஸ்பெஷலான விஷயம் என்றால் அது ஒரு குகையில் படத்தை எடுத்திருப்பார்கள், அதில் ஒரு ஸ்பெஷல் பாடலும் வரும்.

அந்த பாடல் இன்று வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதே போன்று மலையாளத்தில் தயாரான மஞ்சும்மல் பாய்ஸ் என்ற படத்தில் கூட குணா படத்தில் வந்த குகை போன்று செட் போட்டு படம் எடுத்துள்ளனர்.

1991 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 1991 Best Tamil Movies

தனுஷ் மீண்டும் அதை செய்ய வேண்டும்.. 20 வருடம் கழித்து நடிகை ஓபன்

இதயம்:

இயக்குனர் கதிர் இயக்கி முரளி, ஹீரா ராஜகோபால், சின்னி ஜெயந்த் நடித்த காதல் திரைப்படம் தான் இதயம். இப்படத்தினை தயாரிப்பாளர் தியாகராஜன் தயாரிக்க, இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார். இப்படம் 1991 வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றி பெற்றது.

1991 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 1991 Best Tamil Movies

சின்னத்தம்பி:

பி. வாசு இயக்கத்தில் கடந்த 1991ஆம் ஆண்டு வெளிவந்து ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த திரைப்படம் சின்னத்தம்பி. பிரபு, குஷ்பூ இணைந்து நடித்து வெளிவந்த இப்படம் மக்கள் மனதில் இருந்து இன்றும் நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

இளையராஜாவின் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற, அரைச்ச சந்தானம், தூளியிலே ஆடவந்த, குயில புடிச்சு கூண்டில் அடைச்சு என பல பாடல்கள் சூப்பர்ஹிட்டானது. பிரபு, குஷ்பூ மட்டுமின்றி மனோரமா, ராதாரவி, உதயகுமார், கவுண்டமணி என பல நட்சத்திரங்களின் இப்படத்தின் வெற்றிக்கு காரணமாக விளங்கினார்கள்.

1991 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 1991 Best Tamil Movies

கேப்டன் பிரபாகரன்:

1991 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கேப்டன் பிரபாகரன். இப்படம் வெளிவந்து 300 நாட்கள் ஓடி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படம் கேப்டன் விஜயகாந்தின் 100-வது படம் என்ற அடையாளத்துடன் வெளியாகி கேப்டன் என்ற அடைமொழியை பிரபலமாக்கியது.

ஆர்.கே.செல்வமணி இயக்கிய இந்த படத்தில், ரூபினி, சரத்குமார், லிவிங்ஸ்டன், காந்திமதி, ரம்யா கிருஷ்ணன், ஆகியோருடன் மன்சூர் அலிகான் வில்லனாக நடித்திருந்தார்.   

1991 - ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ | 1991 Best Tamil Movies 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்