கனடாவில் (Canada), இரண்டு முதியவர்கள் வாங்கிய லொட்டரிச்சீட்டு அவர்களின் வாழ்க்கையை முழுமையாக மாற்றியுள்ளது.
கனடாவின் கியூபெக்கில் வாழும் வெவ்வேறு குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு பேருக்கு லொட்டரியில் பெரும் தொகை பரிசாக கிடைத்துள்ளது.
Montérégieயில் வாழும் Jacques Deschamps, மற்றும் மொன்றியலில் வாழும் Wilhelmina Van Leeuwen ஆகிய இருவருக்கே இந்த லொட்டரிச்சீட்டில் பணம் கிடைத்துள்ளது.
70 மில்லியன் டொலர்கள்
அதாவது, அவர்கள் இருவருமே 70 மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்த பரிசுச்சீட்டை வாங்கியுள்ளதால், அவர்கள் இருவருக்கும் ஆளுக்கு 35 மில்லியன் டொலர்கள் கையில் கிடைக்க உள்ளது.

Jacques, தனது 60 வயதுகளில் இருக்கிறார். சொந்தமாக கட்டுமானப்பணி நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார்.
லொட்டரியில் பரிசு விழுந்ததைத் தொடர்ந்து, அவர் தனது பணியிலிருந்து ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். தனது நிறுவனத்தை தனது மகனிடம் ஒப்படைக்க உள்ளார் Jacques.
Wilhelminaவோ தனது 70 வயதுகளில் இருக்கிறார். அவர் நெதர்லாந்தைச் சேர்ந்தவர்.

