முந்தைய அரசாங்கங்களின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் இருபது பேருக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணைகளை விரைவுபடுத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவற்றில் சில விசாரணைகள் சுமார் 10 முதல் 15 ஆண்டுகள் பழமையானவை என்று பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால (Ananda Wijepala) குறிப்பிட்டுள்ளார்.
விசாரணை
குறித்த சம்பவங்கள் முன்னாள் அரசாங்கங்களால் முடி மறைக்கப்பட்டதாகவும், புதிய அரசாங்கம் இந்த விசாரணைகளை மீண்டும் திறந்து விசாரணைகளை விரைவுபடுத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு மூலம் நடத்தப்படுவதாக அமைச்சர் ஆனந்த விஜயபால மேலும் கூறியுள்ளார்.
உயர் நீதிமன்ற தீர்ப்பு
இந்த நிலையில், அரசாங்கத்திற்கு ரூ. 53.1 மில்லியன் இழப்பு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோருக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தால் நேற்று (29) கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்பளித்திருந்தது.
இதன்படி, குறித்த இருவரும் வெலிக்கடை சிறைச்சாலையின் சாதாரண கைதிகள் இருக்கும் பிரிவுக்கு அனுப்பட்டுள்ளதுடன், அவர்கள் இருவரும் வெலிக்கடை சிறைச்சாலையின் அச்சுத் துறையில் பணியமர்த்தப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.