2014ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த சிறந்த திரைப்படங்களை இந்த பட்டியலில் பார்க்கலாம் வாங்க.
கத்தி
துப்பாக்கி படத்தை தொடர்ந்து தளபதி விஜய் – இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி இரண்டாவது முறையாக கத்தி படத்திற்காக இணைந்தனர். விவசாயம் மற்றும் விவசாயிகளின் வலிகளை பேசிய இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தில் சமந்தா, சதீஸ் நடித்திருந்தனர். மேலும் இரட்டை வேடத்தில் நடித்து அசத்தியிருப்பார் விஜய்.


நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா
வேலையில்லா பட்டதாரி
தனுஷின் 25வது படம் கண்டிப்பாக வெற்றிபெறும் என எதிர்பார்த்தனர். ஆனால், மாபெரும் அளவில் வசூல் வரவேற்பை பெற்று ப்ளாக் பஸ்டர் வெற்றியை தேடி கொடுத்தது வேலையில்லா பட்டதாரி. வேல்ராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் தனுஷுடன் இணைந்து அமலா பால், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா ஆகியோர் நடித்திருந்தனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.

அரண்மனை
தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு டிரெண்ட் செட்டரான அரண்மனை Franchise-ன் முதல் பாகம் 2014ல் வெளிவந்தது. சுந்தர் சி இயக்கத்தில் உருவான இப்படம் மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. இப்படத்தில் ஆண்ட்ரியா, வினய், ஹன்சிகா, சந்தானம், லட்சுமி ராய் என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

வீரம்
2014ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அஜித் ரசிகர்களுக்கு விருந்தாக வெளிவந்த திரைப்படம் வீரம். சிறுத்தை சிவா – அஜித்தின் கூட்டணியில் உருவான முதல் படமும் இதுவே ஆகும். ஆக்ஷன் கலந்த எமோஷனல் கதைக்களத்தில் உருவாகியிருந்த இப்படத்திற்கு மக்கள் பேராதரவை கொடுத்தனர். மாபெரும் அளவில் வெற்றியடைந்த இப்படத்தில் அஜித்துடன் இணைந்து தமன்னா, விதார்த், பாலா, நாசர், சந்தானம், மயில்சாமி, தம்பி ராமையா ஆகிய நடித்திருந்தனர்.

கோலி சோடா
இயக்குநர் விஜய் மில்டன் என சொன்னால் உடனடியாக அனைவருக்கும் நினைவுக்கு வரும் திரைப்படம் கோலி சோடா. இன்று வரை இப்படியொரு படத்தை யாராலும் கொடுக்க முடியவில்லை. சிறுவர்களை வைத்து மிரட்டலான ஆக்ஷன் கதைக்களத்தை உருவாக்கி தரமான படத்தை கொடுத்திருந்தார் விஜய் மில்டன். சமீபத்தில் கூட இப்படத்தின் தொடர்ச்சியாக கோலி சோடா வெப் தொடர் வெளிவந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜிகர்தண்டா
தமிழ் சினிமாவில் கேங்ஸ்டர் படங்கள் என எடுத்துக்கொண்டால் அதில் கண்டிப்பாக ஜிகர்தண்டாவும் இடம்பெறும். மோசமான ஒரு கேங்ஸ்டர் அசால்ட் சேதுவை, ஒரு இயக்குநர் நினைத்தால் நகைச்சுவை நடிகராக கூட மாற்றமுடியும் என இப்படத்தில் காட்டியிருப்பார் கார்த்திக் சுப்புராஜ். இப்படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் மற்றும் கேமியோ ரோலில் விஜய் சேதுபதி நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

மெட்ராஸ்
பா. ரஞ்சித்தின் சிறந்த படைப்பு என இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது மெட்ராஸ். ஒரு சுவரால் ஏற்படும் மரணங்கள், அதை சுற்றி நடக்கும் அரசியல் குறித்து மிகவும் தெளிவாக இப்படத்தில் பேசியிருப்பார். சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்படத்தில் கார்த்தி, கலையரசன், கேத்ரின் தெரசா, ரித்விகா, மைம் கோபி ஆகியோர் நடித்திருந்தனர்.


ஜனநாயகன் படத்திற்காக விஜய் வைத்த டிமாண்ட் .. ரகசியத்தை உடைத்த இயக்குநர்
பிசாசு
வித்தியாசமான பார்வையில் கதைக்களத்தை அணுகும் இயக்குநர்களில் ஒருவர் மிஸ்கின். இவர் இயக்கத்தில் உருவான சிறந்த திரைப்படங்களில் ஒன்று பிசாசு. பேய்யை வைத்து இப்படியும் ஒரு படம் பண்ண முடியும் என அனைவருக்கும் காட்டினார். இப்படத்தில் நாகா, பிரக்யா மார்ட்டின், ராதாரவி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.


