2024 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை (G.C.E A/L Exam) எதிர்வரும் நவம்பர் மாதம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவித்தலை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த மாணவர்களுக்கு மகிழ்ச்சி தகவல்
பல்கலைக்கழக நுழைவு
அத்துடன் 2025ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை (2025) செப்டெம்பர் மாதம் நடத்த முடியும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
மேலும் பிள்ளைகளின் நேரத்தை வீணடிப்பதைத் தடுப்பதற்காக பரீட்சை நிறைவடைந்தவுடன் உயர்தரக் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் பல்கலைக்கழக நுழைவை விரைவுபடுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக நுழைவு தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |