ஜனாதிபதித் தேர்தலின் கள நிலவரம் மற்றும் தேர்தலில் யாருக்கு வெற்றி வாய்ப்பு என்பன உள்ளிட்ட விடயங்களை ஆராய்ந்து வரும் உள்நாட்டு, சர்வதேச ஆய்வு அமைப்புகளின் கருத்துக் கணிப்பு அறிக்கையை மே நடுப்பகுதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் நிலைப்பாட்டில் தற்போதைய ஜனாதிபதி, மேற்படி அறிக்கைகளை ஆராய்ந்த பின்னரே இறுதியானதொரு முடிவை எடுத்து அது பற்றி அதிகாரபூர்வமாக அறிவிப்பார் எனவும் அறியமுடிகின்றது.
பசில் கூறுவதற்கு ஏற்ப ஆடுவதற்கு நான் பொம்மை கிடையாது! விஜேதாச காட்டம்
பிரசார வியூகம்
இதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தி (Samagi Jana Balawegaya)மற்றும் தேசிய மக்கள் சக்தி (National People’s Power) என்பனவும் கிராமிய மட்டத்தில் கருத்துக் கணிப்புக்களை நடத்தி வருகின்றன.
இதன்போது பெறப்படும் தகவல்களை அடிப்படையாகக்கொண்டு பிரசார வியூகம் அமைக்கப்படவுள்ளதுடன் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கான உள்ளடக்கங்களும் செய்யப்படவுள்ளதாக தெரியவருகின்றது.
அமெரிக்காவில் நடுவானில் திடீரென உடைந்து விழுந்த விமான கதவு: குழப்பத்தில் பயணிகள்
செங்கடலில் தொடரும் பதற்றம்: பிரிட்டன் கப்பல் மீது ஹவுதி தாக்குதல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |