முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ரணில் – அநுர அண்ணன் தம்பி ஜோடி: வெளிப்படையாக விமர்சித்துள்ள சஜித்

நாட்டை தோல்வி அடையச் செய்கின்ற, நாட்டைச் சீரழிக்கின்ற, நாட்டை கொளுத்துகின்ற ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) , அநுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) ஆகியோரின் அண்ணன் தம்பி ஜோடி, அரசியல் ஜோடியாக மாறி இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) விமர்சித்துள்ளார்.

கண்டியில் (Kandy) இன்றையதினம் (09) இடம்பெற்ற மக்கள் பேரணியின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர், “தன்னைத் தோல்வி அடையச் செய்வதே அவர்களுடைய நோக்கம். அவர்கள் அவர்களுக்குள்ளே இரண்டாவது விருப்பு வாக்கை பிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கடவுச்சீட்டு பிரச்சினை

எனவே இரண்டாவது விருப்பு வாக்கு தேவையில்லை.முதலாவது சுற்றிலே ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும்.இந்த மக்கள் அரசியல் டீல்களுக்கு ஏமாற மாட்டார்கள்.

ரணில் - அநுர அண்ணன் தம்பி ஜோடி: வெளிப்படையாக விமர்சித்துள்ள சஜித் | 2024 Presidential Election Sajith S Speech Purpose

இந்த ஜனாதிபதி தேர்தலிலே ஜனாதிபதியே களம் இறங்கி இருக்கின்றார். ஆனாலும் அவருக்கு கடவுச்சீட்டுகளையும் விசாக்களையும் வழங்க முடியாதுள்ளது.

இவர்களால் நாட்டின் பிரச்சினையை தீர்க்க முடியாது.கடவுச்சீட்டுக்கும் வீசாவுக்கும் வரிசை காணப்படுகின்றது.

ரணில்-அநுர சூழ்ச்சி

ஒன்றிணைந்த ஆடை உற்பத்தியாளர் சங்கம் கூறுவதைப் போன்று கொள்வனவாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், தொழில்நுட்ப சேவை வழங்குனர்களுக்கும் எமது நாட்டுக்கு வருவதற்கு விசாக்களை வழங்க முடியாது போயுள்ளது.

ரணில் - அநுர அண்ணன் தம்பி ஜோடி: வெளிப்படையாக விமர்சித்துள்ள சஜித் | 2024 Presidential Election Sajith S Speech Purpose

இது எமது நாட்டிற்கு தாக்கத்தை செலுத்தும். சுற்றுலாத் துறையும் இதனால் வீழ்ச்சி அடையும்.

அநுரவுடன் திருட்டுத்தனமாக டீல் செய்வதை விட்டுவிட்டு விசாக்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்.

இவர்கள் நாட்டை பொறுப்பேற்றால் நாட்டிற்கு பிணையும் இல்லாமல் போகும். ரணில்-அநுர சூழ்ச்சியை தோல்வி அடையச் செய்ய வேண்டும்.” என்றார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.