நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை பரீட்சைகள் திணைக்களத்தின் (Department of Examinations) ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர (Amit Jayasundara) தெரிவித்துள்ளார்.
இதன்படி, பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் அவர்களின் அதிபர்களுக்கும், தனியார் விண்ணப்பதாரர்களுக்கான அனுமதி அட்டைகள் அந்தந்த முகவரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தங்கள்
இதில், ஏதேனும் திருத்தங்கள் தேவைப்பட்டால் மார்ச் பத்தாம் திகதி வரை நிகழ்நிலையில் (Online) திருத்தலாம் என அவர் அறிவுருத்தியுள்ளார்.
www.doenets.lk என்ற வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு அனுமதி
அத்தோடு, மாணவர்களின் தேர்வு அனுமதி அட்டைகளை விரைவில் அவர்களிடம் ஒப்படைக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பாடசாலை அதிபர்களுக்கு அறிவுருத்தியுள்ளார்.
நடைபெறவுள்ள 2025 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை எதிர்கொள்ளும் எண்ணிக்கை 474,147 என்பதுடன் மார்ச் 17 ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை 3,663 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.