2025 – ம் ஆண்டு தொடங்கி இரண்டு மாதங்கள் முடிவடைந்த நிலையில் பல திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதில் சில படங்கள் மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட் ஆனது. சில படங்கள் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் வசூலில் தோல்வி அடைந்தது.
இந்நிலையில், இதுவரை, தமிழ் சினிமாவில் 45 படங்கள் வெளியானதாகவும் அதில் வெறும் 4 படங்கள் மட்டுமே ஹிட் கொடுத்ததாகவும் தயாரிப்பாளர் தனஞ்சயன் கூறிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த 4 ஹிட் படங்கள் என்னென்ன தெரியுமா?
மதகஜராஜா:
13 வருடங்களுக்கு முன் உருவாகி இந்த ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான மதகஜராஜா திரைப்படம்.
குடும்பஸ்தன்:
மணிகண்டன் ஹீரோவாக நடித்து குடும்பங்கள் என அனைத்து தரப்பினரும் கொண்டாடிய குடும்பஸ்தன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் சாதனை படைத்தது.
வெளிவந்தது சிம்புவின் God Of Love படத்தின் மாஸ் அப்டேட்.. ரிலீஸ் எப்போது தெரியுமா?
விடாமுயற்சி:
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து முதன் முறையாக வெளிவந்த திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் சாதனை படைத்தது என்று தயாரிப்பாளர் கூறுகிறார்.
டிராகன்:
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் கொடி கட்டி பறக்கிறது.