அமெரிக்காவை (USA) தலைமையிடமாகக் கொண்டு இயங்கும்`டைம்’ இதழ், ஒவ்வோர் ஆண்டும் உலகின் செல்வாக்குமிக்க 100 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுவருகிறது.
அந்தவகையில், 2025 ஆம் ஆண்டில் செல்வாக்கு பெற்ற 100 பேரின் பட்டியலை வெளியிட்டிருக்கிறது.
இதில் அரசியல், பொழுதுபோக்கு, அறிவியல் மற்றும் வணிகம் போன்ற துறைகளைச் சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள் இடம்பெறுவார்கள்.
இந்தியர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை
இப்பட்டியலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பிரபல நடிகை டெமி மூர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
மேலும் அமெரிக்க ராப் பாடகர் ஸ்னூப் டாக், முன்னாள் டென்னிஸ் வீராங்கனையும் தற்போதைய வணிக பிரபலமுமான செரீனா வில்லியம்ஸ், பிரபல பாடகர் எட் ஷீரன் ஆகியோரும் இதில் உள்ளனர்.
அந்த வகையில் 2025 யில் உலகின் செல்வாக்குமிக்க தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோருக்குக்கான பட்டியலில் இந்தியர்கள் ஒருவர் கூட இடம்பெறவில்லை.
கடந்த ஆண்டு இந்தப் பட்டியலில் இந்திய மல்யுத்த வீராங்கனை ஷாக்சி மாலிக், இந்தி நடிகை ஆலியா பட் ஆகியோர் இடம்பிடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.