ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்ட அரசியல் அமைப்பின் 22 ஆம் திருத்தச் சட்டம் தொடர்பில் ஆளும் கட்சிக்குள் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தெற்கு ஊடகம் ஒன்று வெளியிட்ட செய்தியில் இந்த தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ பதவி காலத்தை ஐந்து ஆண்டுகளுக்கு நிர்ணயிப்பது தொடர்பில் இந்த திருத்தச் சட்டமூலத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
நீதி அமைச்சர்
ஜனாதிபதி மற்றும் நீதி அமைச்சர் ஆகியோர் கூட்டாக இணைந்து இந்த அரசியல் அமைப்பு திருத்தம் தொடர்பில் அமைச்சரவையில், அமைச்சரை பத்திரமன்றை சமர்ப்பித்திருந்தனர்.
இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கி இருந்தது.
எனினும் இந்த திருத்தச் சட்டம் மூலம் தொடர்பிலான வர்த்தமானி அறிவிப்பு வெளியீட்டை ஜனாதிபதி தேர்தலின் பின்னர் மேற்கொள்ளுமாறு நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, நீதி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.
இவ்வாறான ஒரு பின்னணியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வர்த்தமானி அறிவித்தலை உடன் வெளியிடுமாறு நீதி அமைச்சின் செயலாளருக்கு அறிவித்திருந்தார்.
30EU0V
ஆளும் கட்சிக்குள் முரண்பாடு
இதன் அடிப்படையில் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து ஆளும் கட்சிக்குள் உள் முரண்பாடுகள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டாலும் ஒரு வாரம் வரையில் இந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க முடியாது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.