மட்டக்களப்பு (Batticaloa)காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் யுத்தியை போதை
ஒழிப்பு திட்டத்தின் கீழ் காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை
நடவடிக்கைகளின் போது 250 லீட்டர் கசிப்புடன் 22 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஹசீஸ் போதைப் பொருளுடன் ஒருவருமாக 23 பேர் கைது
செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஜி.
கஜநாயக்கா தெரிவித்துள்ளார்.
திடீர் சுற்றி வளைப்பு
காத்தான்குடி, ஆரையம்பதி, புதுக்குடியிருப்பு ,நாவற்குடா, உட்பட காத்தான்குடி
பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பொலிஸார் நடாத்திய திடீர் சுற்றி
வளைப்பு தேடுதல்களின் போது இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது கர்பலா
பிரதேசத்தில் வைத்து ஹசீஸ் போதை பொருளுடன் 63 வயது நபர் ஒருவர் கைது
செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று(27) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சம்பவங்கள் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
[RSEFGGT