குருநாகல் மாவட்டத்தில் மேலதிக வகுப்புகளுக்கு செல்லும் மாணவர்களிடம் பணம் பறிக்கு இளைஞர் கும்பலை சேர்ந்த பலர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக குருநாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட குழு அந்தப் பகுதியிலுள்ள பாடசாலையில் படிக்கும் மாணவர்கள் என தெரியவந்துள்ளது.
கல்கமுவ, தம்புள்ள, அலவ்வ, கிரியுல்ல மற்றும் குளியாபிட்டிய போன்ற தொலைதூரப் பகுதிகளிலிருந்து குருநாகலுக்கு வரும் மாணவர்களை அச்சுறுத்தி மிரட்டி, அவர்களிடமிருந்து 100 முதல் 1000 ரூபாய் வரை பலவந்தமாக பணம் பறிப்பதாக தெரியவந்துள்ளது.
பணம் பறிக்கும் கும்பல்
இது தொடர்பாக குருநாகல் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்ஸ விதானகேவுக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து, சிவில் உடையில் கண்காணிப்பில் ஈடுபட்ட பொலிஸார் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இதேவேளை குருநாகல் பகுதிக்கு வருகை தரும் இளம் காதலர்களை மிரட்டி பணம் பறிக்கும் இளைஞர் கும்பலை சேர்ந்த ஒரு குழுவும் இதே முறையில் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறான நிலையில் வழிப்பறிகள் தொடர்பில்
பாடசாலைகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தொடர் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விதானகே மேலும் தெரிவித்துள்ளார்.

