முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

லெபனானை சூறையாடும் இஸ்ரேல்: 24 பேரை கொன்ற ஏவுகணை தாக்குதல்

லெபனான் (Lebanon) மீது இஸ்ரேல் (Israel) நடத்திய கோர தாக்குதலில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

பலஸ்தீனத்துடனான (Palestine) மோதலை இஸ்ரேல், லெபானனுக்கும் விரிவுப்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதலை நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பலஸ்தீனத்திற்கு எதிரான போரில் இஸ்ரேல் தீவிரமாக இறங்கியது. இஸ்ரேல் ஹமாஸுடன் (Hamas) இந்த போரை நிறுத்தாமல், லெபனானுக்கும் தன்னுடைய தாக்குதலை விரிவுப்படுத்தியுள்ளது.

ஏவுகணை தாக்குதல்

இந்நிலையில், நேற்றைய தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக லெபனான் ராக்கெட்களை கொண்டு இஸ்ரேலை தாக்கியது.

லெபனானை சூறையாடும் இஸ்ரேல்: 24 பேரை கொன்ற ஏவுகணை தாக்குதல் | 24 Killed In Israeli Retaliatory Attack On Lebanon

இதில் 7 பேர் வரை கொல்லப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் வெளிநாட்டை சேர்ந்த தொழிலாளர்கள் என்றும், 3 பேர் இஸ்ரேலியர்கள் எனவும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் நேற்றையதினம் (31.10.2024) லெபனான் மீது இஸ்ரேல் சரமாரியான ஏவுகணை தாக்குதல் நடாத்தியது,

இந்த தாக்குதலில் சுமார் 24 பேர் உயிரிழந்துள்ளதுடன் காசாவில் (Gaza) இயங்கி வந்த கடைசி மருத்துவமனையையும் இஸ்ரேல் தாக்கி அழித்திருக்கிறது.

காசாவில் தண்ணீர் தட்டுப்பாடு

தாக்குதலுக்குள்ளான மருத்துவமனையில்தான் அனைத்து முக்கிய மருந்துகளும் இருந்துள்ளதுடன், இந்த தாக்குதல் மூலம் காசாவில் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லெபனானை சூறையாடும் இஸ்ரேல்: 24 பேரை கொன்ற ஏவுகணை தாக்குதல் | 24 Killed In Israeli Retaliatory Attack On Lebanon

இந்த தாக்குதலுக்கு ஐநா கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறது.

ஹமாஸ் தலைவர்கள் உயிரிழந்துள்ள நிலையில் போர் உடனடியாக நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.

ஏற்கெனவே பலஸ்தீனத்தின் மீதான தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று அமெரிக்க வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது புதிய தாக்குதல் மீண்டும் விவாதமாக வெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.