முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை அதிகாரிகளும் கடன் பத்திரக்காரர்களும் இரண்டாவது முறையாக நேரடிப் பேச்சுவார்த்தை

Courtesy: Sivaa Mayuri

இலங்கை அதிகாரிகளும் கடன்  பத்திரக்காரர்களும் இந்த வாரம் 12 பில்லியன் டொலர்கள் கடனை திருப்பிச் செலுத்தாத கடன் பத்திரங்களை மறுசீரமைப்பது தொடர்பாக இரண்டாவது சுற்று நேரடிப் பேச்சுக்களை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வழிநடத்தல் குழு என அழைக்கப்படும் பத்திரப்பதிவுதாரர்களின் குழு, இந்தச் சுற்றுப் பேச்சுவார்த்தையில் இலங்கை அரசாங்கத்தின் புதிய முன்மொழிவு குறித்து கலந்துரையாடல்களை தொடரும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இந்த தகவல் குறித்து பத்திரதாரர்கள் மற்றும் இலங்கை அரசாங்க பிரதிநிதிகளின் கருத்துக்கள் வெளியாகவில்லை.

இரண்டாம் சுற்றுப்பேச்சுவார்த்தை 

நாட்டில் ஜனாதிபதி தேர்தலை ஒக்டோபர் நடுப்பகுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், இந்த விடயத்தில் விரைவான முன்னேற்றம் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இலங்கை அதிகாரிகளும் கடன் பத்திரக்காரர்களும் இரண்டாவது முறையாக நேரடிப் பேச்சுவார்த்தை | 2Nd Direct Talks Slankan Authorities And Creditors

இதன் அடிப்படையில் இலங்கை அரசாங்கம், ஒரு முன்மொழிவை அனுப்பியுள்ளதுடன்  இது தொடர்பிலேயே இரண்டாம் சுற்றுப்பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

இதேவேளை, 3 பில்லியன் டொலர் வேலைத்திட்டத்தின் கீழ் சர்வதேச நாணய நிதியத்தின் கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு இலங்கை, பத்திரப்பதிவுதாரர்கள் மற்றும் இருதரப்பு கடன் வழங்குபவர்களுடன் ஒப்பந்தங்களை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகும்.

இலங்கை அதிகாரிகளும் கடன் பத்திரக்காரர்களும் இரண்டாவது முறையாக நேரடிப் பேச்சுவார்த்தை | 2Nd Direct Talks Slankan Authorities And Creditors

இதில் இருதரப்பு கடன் வழங்குநர்கள் என்ற அடிப்படையில், இந்தியா மற்றும் பாரிஸ் கிளப் உள்ளிட்ட கடன் வழங்குநர்களின் குழுவுடன் ஒப்பந்தம் ஒன்றுக்கான தயார் நிலை உள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்