முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பில் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட மூவர் கைது

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தில் போதை
பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்றையதினம்(9) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேகநபர்களிடமிருந்து 20 இலட்சம் ரூபா பெறுமதியான ஒரு கிலோ கேரளா கஞ்சா, 50 கிராம் ஜஸ் போதை பொருள்
25 கிராம் ஹரோயின் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.

கைது 

பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றினையடுத்து சிரேஸ்ட பொலிஸ்
அத்தியட்சகர் லலித் லீலாரத்தினவின் ஆலோசனைக்கமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
பரியந்த பண்டாரவின் வழிகாட்டலில் பொலிஸ் பரிசோதகர் எஸ்.சந்திமா தலைமையில்
பொலிஸ் கொஸ்தாப்பர்களான ஜெயசிங்க 20637, இகலகம15468, ஜெயரத்தின 53900,
கொடிக்கார 40202, டிகாஷான் 90102, தேவராசா 90890; ஆகியேர் கொண்ட குழுவினர்
சம்பவதினமான நேற்று இரவு கருவப்பங்கேணி அம்புறோஸ் வீதியில் மாறுவேடத்தில்
கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

மட்டக்களப்பில் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட மூவர் கைது | 3 People Including Woman Arrested Drugs In Batti

இதன் போது குறித்த வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் உட்பட 3 பேர்
போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது அவர்களை சுற்றிவளைத்து
கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து ஒரு கிலோ கேரளா கஞ்சா, 50 கிராம் ஜஸ் போதை
பொருள் 25 கிராம் ஹரோயின் போதை பொருட்களை மீட்டனர்.

இதில் மட்டு.கருவப்பங்கேணியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஒருவர், அம்பாறை
சாய்ந்த மருதைச் சேர்ந்த 34 வயதுடைய மற்றும் நிந்தவூரைச் சேர்ந்த 35 வயதுடைய
பெண் ஆகியோரை கைது செய்தனர்.

மேலதிக விசாரணை

அத்துடன் கைது செய்யப்பட்ட நிந்தவூரைச் சேர்ந்த பெண்ணின்
கணவர் போதை வியாபாரத்தில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் அவருடன்
சிறையில் இருந்த கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த போதை பொருள் வியாபரியான
இளைஞனுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளதாகவும்.

குறித்த இளைஞன் சிறையில் இருந்து நீதிமன்ற பிணையில் அண்மையில் வெளிவந்து
நிந்தவூரைச் சேர்ந்த பெண்ணுடனும் சாய்ந்தமருதைச் சேர்ந்த இளைஞனுடன் சேர்ந்து
இந்த வியாபாரத்தில் ஈடுபட்டுவந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில்
தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பில் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட மூவர் கைது | 3 People Including Woman Arrested Drugs In Batti

இதில் கைது செய்யப்பட்டவர்களை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

மேலும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.