லண்டனில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது, அந்நாட்டு காவல்துறையினர் சுமார் 300 பேரை கைது செய்துள்ளனர்.
போராட்டத்தில் சுமார் 1,500 பேர் பங்கேற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பிரிட்டனில் தடைசெய்யப்பட்ட அமைப்பால் போராட்டம்
பாலஸ்தீன நடவடிக்கை குழு எனப்படும் பிரிட்டனில் தடைசெய்யப்பட்ட அமைப்பால் இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஓகஸ்ட் மாதம் இதேபோன்ற போராட்டத்தின் போது சுமார் 500 பேரை கைது செய்ய அந்நாட்டு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தமை குறிப்பிடத்தக்கது.



