வசூல் நாயகி
இன்றைய காலகட்டத்தில் ஒரு படத்தின் வசூல் வைத்து தான், அது வெற்றியா அல்லது தோல்வியா என பார்க்கப்படுகிறது. படத்தின் கதை எப்படி இருக்கிறது என்பதை விட, இப்படம் ரூ. 1000 கோடி வசூல் செய்யுமா என்று தான் ரசிகர்களே கேட்க துவங்கிவிட்டனர்.
இப்படிப்பட்ட சூழலில் முன்னணி நடிகை ஒருவர், கடந்த இரண்டு ஆண்டுகளில் தான் நடித்த படங்களின் மூலம் ரூ. 2500 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளார்.
அஜித்தின் குட் பேட் அக்லி படம் எப்படி உள்ளது.. Live Updates
ராஷ்மிகா
அவர் வேர் யாருமில்லை நேஷ்னல் க்ரஷ் என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகை ராஷ்மிகா மந்தனா தான். ஆம், ராஷ்மிகா நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளிவந்த அனிமல் திரைப்படம் ரூ. 800 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. இதை தொடர்ந்து சென்ற ஆண்டு வெளிவந்த புஷ்பா திரைப்படம் ரூ. 1800 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.
இதன்பின் இந்த ஆண்டு வெளியான சாவா படமும் ரூ. 700 கோடி முதல் ரூ. 800 கோடி வசூல் உலகளவில் வசூல் செய்ததாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் இரண்டு ஆண்டுகளில் ரூ. 3400 கோடி வசூல் ராஷ்மிகா மந்தனா நடித்த படங்கள் வசூல் செய்துள்ளது.