இலங்கை தமிழரசுக் கட்சியின் மறைந்த மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் (Mavai Senathirajah) 31 ஆவது
நினைவு நாள் பிரித்தானியாவில் (United Kingdom) அனுஷ்டிக்கப்பட்டது.
இந்த நிகழ்வானது, ஹெரொவ் ஆர்ட்ஸ் சென்டரில் (Harrow Arts Centre) நேற்றையதினம்
(2024.02.28) நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்
இதன்போது ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு, அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மலர்
தூவி உணர்வு ரீதியாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தனது 82 ஆவது வயதில் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் திகதி காலமானார்.
உடல் நலக்குறைவால் யாழ். போதனைா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.