கடந்த பெப்ரவரி 22 முதல் நேற்று(03) வரையிலான 4 மாத காலப்பகுதியில், முப்படைகளில் இருந்தும் தப்பியோடிய 3504 வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடக பணிப்பாளர் பிரிகேடியர் பிராங்க்ளின் ஜோசப் தெரிவித்தார்.
அதன்படி, இராணுவத்தில் இருந்து தப்பியோடிய 2937 பேர், கடற்படையில் இருந்து தப்பியோடிய 289 பேர் மற்றும் விமானப்படையில் இருந்து தப்பியோடிய 278 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தப்பியோடியவர்களுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு
முப்படைகளில் இருந்து தப்பியோடியவர்களுக்கு அந்தப் படைகளிடம் சரணடைய கடந்த ஆண்டு மே மாத இறுதி வரை பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.
எனினும், இராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் காவல்துறையினர் சோதனைகளை நடத்தி தப்பியோடிய வீரர்களைக் கைது செய்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடக பணிப்பாளர் தெரிவித்தார்.