இலங்கைக்கு வெளிநாடுகளில் உள்ள பணியாளர்களின் பணவனுப்பல் கடந்த ஜூலை மாதத்தில் அதிகரித்துள்ளது.
இந்த விடயத்தினை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) தெரிவித்துள்ளது.
அதற்கமைய கடந்த ஜூலை மாதத்தில் அனுப்பப்பட்ட பணம் 3,710.80 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
வெளிநாட்டுப் பணியாளர்கள்
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் வெளிநாட்டுப் பணியாளர்களின் பணவனுப்பலில் கடந்த ஜூன் மாதத்தில் 10.3 சதவீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை இந்த வருடத்தின் முதல் 5 மாதங்களில் வெளிநாட்டுப் பணியாளர்களின் பணவனுப்பல் 28.9 சதவீதமாகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.