முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அரசின் தவறுகள் அதிகாரிகள் மீது சுமத்தப்படுகிறது:குற்றம் சாட்டும் மொட்டுக் கட்சி

அநுர அரசின் அரசியல்வாதிகள் செய்யும் தவறுகளை மறைப்பதற்காக அவற்றை அதிகாரிகள் மீது சுமத்தும் செயற்பாடுகள் தொடராக நடைபெற்று வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜ்ஜீவ எதிரிமான குற்றம் சாட்டியுள்ளார்.

மொட்டுக் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்துரையாற்றிய அவர்,

அரசாங்கத்தின் செயற்பாடுகள்

இது அரசாங்கம் செய்யும் ஒரு கீழ்த்தரமான செயற்பாடாகவே நாம் நோக்கிறோம்.முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் விபத்தில் பொலிஸார் தங்களின் கடமையை சரியாக செய்யவில்லை என அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு அண்மையில் ‘டித்வா’சூறாவளியால் பல உயிர்கள் இழக்கப்பட்டு பாரிய சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன.அதற்கும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரிகளை குற்றம் சுமத்துகின்றனர்.ஆனால் அவர்கள் அவதானம் தொடர்பில் ஏற்கனவே அறிவித்துள்ளதாக ஊடகங்களுக்கு தெரிவிக்கின்றனர்.

அரசின் தவறுகள் அதிகாரிகள் மீது சுமத்தப்படுகிறது:குற்றம் சாட்டும் மொட்டுக் கட்சி | Sanjeewa Edirimanna Npp Garverment

அதேபோல அண்மையில் மருந்து ஒவ்வாமையால் ஏற்பட்ட மரணம் தொடர்பில் கடந்த அரசாங்கத்தில் கொள்வனவு செய்யப்பட்ட மருந்து தொடர்பில் தங்களுக்கு அதிகாரிகள் அறிவிக்கவில்லை என்கின்றனர்.

ஆனால் குறித்த மருந்து தொடர்பில் கண்டி வைத்தியசாலையில் செய்யப்பட்ட பரிசோதனைகளில் அதில் கிருமி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு அந்த மருந்து தடைசெய்யப்பட்டுள்ளது.

அரசின் தவறுகள் அதிகாரிகள் மீது சுமத்தப்படுகிறது:குற்றம் சாட்டும் மொட்டுக் கட்சி | Sanjeewa Edirimanna Npp Garverment

அப்படி இருக்கும் சந்தர்ப்பத்தில் இந்த மருந்து எப்படி வழங்கப்பட்டது என வைத்தியர்களை குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும் 323 கொல்களன்கள் வெளியேற்றத்திற்கு சுங்க அதிகாரிகளை குற்றம் சாட்டினர்.

அரசாங்கத்தின் இயலாமையை அதிகாரிகள் மீது சுமத்துவதாகவே தோன்றுகிறது என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்