கனடாவின் (Canada) மேற்கு கியூபெக் பகுதியில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 4.1 ரிச்டர் அளவில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளதாக கனடிய நில அதிர்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நில அதிர்வு நிறுவனம்
இந்த நிலநடுக்கத்தை ஒட்டோவா மற்றும் கேடின்யூ ஆகிய பகுதிகளிலும் உணர முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நில அதிர்வு காரணமாக சேதங்கள் ஏதும் ஏற்பட்டு இருக்காது என அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
5 ரிச்ட்ர் அளவிற்கு மேற்பட்ட நில அதிர்வுகளினால் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என கனடிய நில அதிர்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டின் சில இடங்களில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.